நீரிழிவு நோய் என்பது ஒரு நோய் அல்ல!, நமது உடலில் ஏற்படும் ஒருவித ஹார்மோன் குறைபாடு.
தொழுநோய் /காசநோய்க்கு மருந்து உண்டு குணபடுத்த முடியும், ஆனால்
நீரிழிவுநோயை மருந்தினால் கட்டுபடுத்த மட்டுமே முடியும், எனவே நீரிழிவுநோய் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும்.சர்க்கரைநோய் இருப்பது தெரிந்து சிலர் கவலைபடுகிறார்கள், அப்படி கவலைப்படுவதை தவிர்த்துவிட்டு,
கட்டுபாட்டுடன் சாப்பிட்டால் இந்த நோய் நம்மை ஒன்றும் செய்து விடாது,
30 முதல் 40 வயதில் இருப்பவர்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதனை செய்து பார்க்கவேண்டும்,
கிராமங்களில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை, அவர்களுக்கு மாத்திரை சாப்பிடுவது என்பது பிடிக்காத ஒன்று,
டாக்டர் அறிவுரை கூறினாலும் ஏற்பதில்லை. இந்த நோய் அதிகரித்தால் வரும் விளைவுகளைப் பற்றி தெரியாமல் பின்பு அவதிபடுகிறவர்கள் அதிகம்.
படித்தவர்கள் கூட விழிப்புணர்வுடன் இருப்பதில்லை. எனக்கு தெரிந்த (படித்தவர்) ஒருவர் ஐந்து வருடமாக தொடர்ந்து ஒரே மாத்திரை சாப்பிடுகிறார். அந்த மாத்திரை ஐந்து வருடங்களுக்கு முன்பு டாக்கடர் எழுதிக் கொடுத்தது. அதன் பிறகு அவர், இந்த நோய் குறித்து டாக்டரிடம் ஆலோசனைப் பெறவில்லை. குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது டாக்டரிடம் செக்கப் போகுமாறு கூறினேன்,அதற்கு அவர் கூறிய பதில்
"எனக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை, நான் ஏன் டாக்டரிடம் போகவேண்டும்?"
நண்பர் ஒருவருக்கு சுகரின் அளவு 300 மேல் இருக்கும். ஆனால், மாத்திரை தினமும் போடமாட்டார், அவர் அதிகமா சாப்பிடும் அன்று மட்டும் மாத்திரை போடுவார். இவரிடம் எப்படி புரியவைப்பது?
இந்த நோய் வந்தாலும் (மற்றவர்களின் அனுபவத்தை கேட்காமல்) புத்தகம் வாயிலாக படித்தாவது நோய் பற்றிய விழிப்புணர்வு அடையலாம். உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் டாக்டரின் உரிய ஆலோசனையின் பேரில் மருந்து சாப்பிட்டால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
.
No comments:
Post a Comment